தொடர்ந்து வீரியமாக போராடுவோம்! திவ்யபாரதி

சென்னை, 

கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஆவணப் பட இயக்குனரான திவ்யபாரதி, தொடர்ந்து வீரியமாக நம் போராட்டத்தை தொடர்வோம் தோழர்களே என்று தனது வலைதள பக்கத்தில்தெரிவித்துள்ளார்.

சமூகபோராளியான திவ்யபாரதி ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் இயக்கி உள்ளார்.  2009-ம் ஆண்டு மாணவராக இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டதுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் ஆஜராகாததால், அவருக்கு மதுரை ஜே.எம்.-2 நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.

அதையடுத்து அவரை கைது செய்த போலீசால்ர,  நீதிமன்றத்தில் என்னை ஆஜர் படுத்தியதாகவும், உடனடியாக தன்னை ஜாமினில் விடுவித்ததாகவும் கூறி உள்ளார்.

தான் கைது செய்யப்பட்டவுடன் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,

Jm2 நீதிமன்ற நீதிபதி நிபந்தனை ஜாமினில் என்னை விடுவித்தார்.  மதிச்சியம் காவல் நிலையத்தில் ஒரு வார காலம் Sign போட சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன் தோழர்களே இப்போது.  வழக்கில் எந்த வேண்டுகோளுமின்றி ஆஜரான அததுனை வழக்கறிஞர் தோழருக்கும் என் நன்றி.

உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் என் நன்றியும் அன்பும். தொடர்ந்து வீரியமாக நம் போராட்டத்தை தொடர்வோம் தோழர்களே.

– திவ்யபாரதி