எதிர்ப்புகளை தவிடு பொடியாக்குவோம்: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

ராமநாதபுரம்:

த்தனை வழக்குகள் போட்டாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் தவிடுபொடியாக்குவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இன்று தேவர் குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு காலையில் மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், துணைமுதல்வர் உள்பட அமைச்சர்கள், அதைத்தொடர்ந்து தேவர் சமாதி அமைக்கப்பட்டுள்ள  ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னுக்கு முதல்வர், துணைமுதல்வர் உள்பட அமைச்சர்கள் சென்று தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு மீது  எத்தனை வழக்குகள் போட்டாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் தவிடுபொடியாக்குவோம் என்றார.

எத்தனை சோதனைகள் வந்தாலும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் எத்தனை வேதனைகள் வந்தாலும் உங்களின் துணையுடன் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்குவோம் என்றவர், அரசு மீதும், என் மீதும் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் திமுக போடட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. திமுகவுக்குத்தான் அந்த பயம் இருக்கிறது என்றார்.

முன்னாள் திமுக அமைச்சர்களில் பலர் மீது வழக்குகள் நிலுவையில்  உள்ளன. அதையெல்லாம் மறைப்பதற்காகத்தான் இப்போது அமைச்சர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். மிரட்டுகிறார்கள். இவை ஒருபோதும் செல்லுபடியாகாது. எத்தனை எதிரிகள் வந்தாலும் அவர்களையெல்லாம் தூள்தூளாக்குவோம். எங்களை பயமுறுத்தி, திமுக ஒருபோதும் வெற்றிபெற முடியாது.ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் எங்களை மிரட்டி பார்க்கிறார்கள் என்ற முதல்வர், டெண்டர் முறைகேடு வழக்கில் சொந்தமாக வாதாடி தடை பெற்றுள்ளேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.