பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளைக் களைய வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இதனால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல பெண்கள் இந்த லாக் டவுனில் குடும்பக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்கள் தப்பிக்க வழியில்லாமல் வீட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஹெல்ப் லைன் இருக்கிறது. அந்த நம்பர் 1-800-102-7282. இந்த நம்பருக்கு அழைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உதவி செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.