‘பாவ மன்னிப்பு’ குறித்து ஆராய வேண்டும்: மத்திய சட்ட கமிஷன்

டில்லி:

ட்ட கமிஷனின் பதவிக்காலம் முடிவடைந்த  நிலையில், பல்வேறு சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளத.

அதில், கிறிஸ்தவ ஆலயங்களில் வழங்கப்படும்  ‘பாவ மன்னிப்பு’ குறித்து ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

சட்டமன்றம் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒருசேர நடத்தலாம் என்று ஆலோசனை கூறி உள்ள மத்திய சட்ட கமிஷன், குடும்பநல சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் தனிநபர் தொடர்பான சட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், திருத்தங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆண்களின் திருமண வயதை பெண்களுக்கானதுபோல 18 ஆக குறைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ள நிலையில், பாவ மன்னிப்பு குறித்தும் ஆராய வேண்டும் என்றும் கூறி உள்ளது. கேரளா சர்ச் விவகாரத்தை கருத்தில்கொண்டு இந்த பரிந்துரையை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமான, பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பாதிரியார்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கிறிஸ்தவ ஆலயங்களில்  பாவ மன்னிப்பு கேட்கும் முறையை தடை செய்ய வேண்டும் என குரல் எழும்பியது.

இதுகுறித்து சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. அதில், ‘பாவமன்னிப்புக்கு மாற்று வழி’ என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். கன்னியாஸ்திரிகளும், பாவ மன்னிப்பு அளிப்பது குறித்து ஆராயலாம்’ என சட்ட கமிஷன் கூறியுள்ளது.