இரட்டைஇலையை மீட்போம்: அதிமுக செயற்குழு முதல் தீர்மானம்!

சென்னை:

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இன்று காலை சுமார்.10.30 மணி அளவில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மறைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தீர்மானத்தை வாசித்தார்.

அதில் முதல் தீர்மானமாக இரட்டை இலையை மீட்க வேண்டும் என்று முதல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன.