Random image

2ஜி தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை டிசம்பர் 21ஆம் தேதி பார்க்கலாம்! கனிமொழி

டில்லி,

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கில் முறைகேடு நடந்த வழக்கில் வரும் 21ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்.பி. கனிமொழி, 2ஜி வழக்கின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை டிசம்பர் 21ம் தேதி பார்க்கலாம் என்று கூறினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு,  டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, திமுகவை சேர்ந்த ராஜா தொலைதொர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான தொடரப்பட்ட வழக்கில், இந்த முறைகேடில் ஈடுபட்டதாக ராஜா, கனிமொழி உள்பட சிலர் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்புகோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி சைனி, தீர்ப்புதேதி இன்று(டிச.,5) வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். தீர்ப்பு இந்நிலையில், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு வரும் டிச.,21ல் காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் எனவும், தீர்ப்பு எழுதும் பணி முடிவடைந்துவிட்டதாகவும் நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று டில்லி சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியிடம் செய்தியாளர்கள், தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை வரும் 21ந்தேதி அனுபவிக்கலாம் என்று கூறினார்.

வரும் 21ந்தேதிதான் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ள தால், தீர்ப்பின் பாதிப்பு திமுகவுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும்.