புதுச்சேரி:

புதுச்சேரி வளர்ச்சிக்கு ராஜினாமா மட்டுமே தீர்வல்ல. இணைந்து செயல்படுங்கள் என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கும், பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே அதிகார மோதல்  நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில்,புதுச்சேரியில் விவசாய கடன் தள்ளுபடி, வாரியத்தலைவர் நியமனம் மற்றும் பதவி நீட்டிப்பு போன்ற விவகாரங் களில் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டு தடை செய்திருந்தார். அதை மத்திய அரசு ரத்து செத்துள்ளது. இதையடுத்து, மாநில அதிகாரம் முதல்வருக்கே என்று கூறிய நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி  ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் ஆளுனர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கதில் பதிவிட்டிருப்பதாவது,

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,

ராஜினாமா செய்யுங்கள் என கூற வேண்டாம், வளமான புதுச்சேரியை உருவாக்க என்னுடன் கைகோருங்கள். புதுச்சேரி மக்கள் என்னை சந்தித்து குறைகளை கூறி தீர்வு காண்கிறார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பாடுவடுவதற்கு ராஜினாமா மட்டுமே தீர்வல்ல, இணைந்து செயல்படுங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.