மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கடித விவகாரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

டில்லி :

‘மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தவறாக பயன்படுத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளதாக, ஒரு கடிதம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை எற்படுத்தி வந்தது. இந்த நிலையயில், அந்த கடிதத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என, தேர்தல் கமிஷன்  விளக்கம் அளிதது உள்ளது.

நாடு முழுவதும் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினில் எந்தவித குளறுபடியும் செய்ய முடியாது என்று ஆணித்தரமாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்கள்கு முன்பு  சமூக வலைதளங்களில், தேர்தல் கமிஷன் சார்பில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வைரலாகி வந்தது. இந்த கடிதம் குறித்து வடமாநில ஊடகங்களும் செய்திகள்  வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன,.

அந்தகடிதத்தில்,  தேர்தல் கமிஷன் எழுதியதைப் போல, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக வும், அது குறித்து விசாரணை நடத்தலாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த கடிதம் குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. அதில்,  ‘சமூக வலைதளங்களில் வெளியான கடிதத்தை, தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை. அதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.  இது குறித்து உரிய விசாரணை நடத்த, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது’ என, தெரிவிக்கப்பட்டது.