பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது என்னுடைய கையெழுத்தில்லை : மணிரத்னம்

‘பசு வதை தடுப்பு’ என்னும் பேரில் அப்பாவி மக்கள் கொலை செய்ய படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால் இதை மணி ரத்னம் மறுத்துள்ளார். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன் , பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது என்னுடைய கையெழுத்தில்லை என்று தெரிவித்துள்ளார் .

மேலும் இதுபோன்ற எந்த கடிதமும் தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி