மும்பை:  இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை விமான நிலையத்தை பொறுப்பேற்று கையகப்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, உலகளாவிய 2 முதலீட்டு நிறுவனங்கள், இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கும், நிதியமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளன.

அபுதாபியைச் சேர்ந்த அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி(ஏடிஏஐ) மற்றும் கனடாவின் பப்ளிக் செக்டார் பென்ஷன்(பிஎஸ்பி) போன்ற நிறுவனங்கள்தான் அவை.

மும்பை விமான நிலையத்தைப் பொறுப்பேற்றுக் கொள்வதில், தற்போது ஏற்பட்டிருக்கும் தேவையற்ற தாமதம் மற்றும் நாடகத்தில் தலையிட்டு, அந்த செயல்பாட்டை நல்ல முறையில் நிறைவுசெய்து தருமாறு, அவை, தங்கள் கடிதத்தில் கோரியுள்ளன.

அந்த இரண்டு முதலீட்டு நிறுவனங்களும், அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு கோரியுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, அதானி உள்ளிட்ட மூன்றாம் தரப்பினரிடம் பேசுவதற்கு, ஜிவிகே குழுமத்தை, முதலீட்டாளர் கூட்டமைப்பு நியமித்திருந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே உள்ளது. இந்நிலையில்தான், இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.