விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் வர வேண்டும்…..இலங்கை அமைச்சர் அதிரடி பேச்சு

கொழும்பு:

இலங்கை வடக்கு மாகாண அமைச்சராக இருப்பவர் விஜேயகலா மகேஸ்வரன். ஐக்கிய தேதிய கட்சியை சேர்ந்த இவர் யாழ்ப்பாண பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழவும், தெருவில் சுதந்திரமாக நடமாடவும், நமது குழந்தைகள் பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்” என்றார்.

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்டார். இதை சுட்டிக்காட்டி விஜயகலா மகேஸ்வரன் பேசுகையில், ‘இதற்கு தான் சிறிசேனாவுக்கு வாக்களித்தோம். வடக்கு மாகாணத்தில் எந்த வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்படவில்லை’’என்றார்.

விஜேயகலாவின் இந்த பேச்சு அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று அமளியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளும் கட்சி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். “விஜேயகலா பேச்சு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி