சென்னை:
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நூலகத்துறை வெளியிட்ட அறிவிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பொது நூலகங்களுக்கு வர அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. மேலும் சில விதிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  1. பகுதி நேர நூலகங்களை திறக்க அனுமதியில்லை
  2. அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு அனுமதியில்லை
  3. நூலகர்கள் / நூலக பணியாளர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிவது அவசியம்
  4. வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளில் இருந்து நூலக பணியாளர்கள் தான் எடுத்து கொடுக்க வேண்டும் வயதுக்கு கீழ் உள்ளவர்கள் , 65 வயது மேல் உள்ளவர்கள் மற்றும்
  5. கர்ப்பிணிப் பெண்களுக்கு நூலகத்தின் உள் அனுமதி இல்லை.
  6. கொரோனா பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பொது நூலகங்கள் மீண்டும் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.