டிசம்பரில் எல் ஐ சி ஏஜண்டுகள் வேலை நிறுத்தம்

திருநெல்வேலி

ரும் டிசம்பர் முதல் ஆயுள் காப்பீடு முகவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள 16 கிளைகளில் ஆயுள் காப்பீடு முகவர்கள் சங்க கூஉட்டமைப்பு சார்பில் விழா நடத்தப்பட்டது.   இந்த நெல்லை கோட்ட விழா பாளை ஆயுள் காப்பீடு அலுலகத்தில் நடைபெற்றது.    இந்த விழாவில் சங்கத்தின் தென் மண்டல செயலாளர் சக்ரவர்த்தி ராஜு கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில் ”ஆயுள் காப்பீடு பாலிசி மீது விதிக்கும் ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய வேண்டும்.   பாலிசி எடுக்க உதவும் முகவர்களுக்கான கமிஷனை உயர்த்த வேண்டும்.   அத்துடன் பாலிசி எடுப்போருக்கு அளிக்கப்படும் போனஸ் தொகையை அதிகரிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்கு நிர்வாகம் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.  அவ்வாறு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி  முகவர்கள்வேலை நிறுத்தப் போராட்டத்தில் வரும் டிசம்பர் முதல் ஈடுபடுவார்கள்” என தெரிவித்தார்.