டெல்லி: 2 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி வாய்ப்பு அளித்துள்ளது.

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏ விதிகளின்படி, பிரிமியம் கட்ட தவறி 2 ஆண்டுக்குள்தான் பாலிசியை புதுப்பிக்க முடியும். அதற்கு மேல் புதுப்பிக்க முடியாது.

ஆனால், ஐஆர்டிஏ சிறப்பு அனுமதியை எல்ஐசி தற்போது பெற்றிருக்கிறது. அதன்படி, 2 ஆண்டுக்குப் பிறகும் பாலிசியை புதுப்பிக்கும் வாய்ப்பை எல்ஐசி அறிவித்திருக்கிறது.

இது ஒரு சிறப்பு சலுகையாகும். இந்த நல்ல வாய்ப்பை பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்ஐசி கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதன்படி, 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு பாலிசி வாங்கிய பாலிசி தாரர்கள், காலாவதியான தங்கள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லாத பாலிசிகளை 5 ஆண்டுகளுக்குள்ளும், யுலிப் பாலிசிக்களை 3 ஆண்டுகளுக்குள்ளும் புதுப்பித்துக்கொள்ளலாம்.