ஐடிபிஐ வங்கியை கைப்பற்றியது காப்பீடு நிறுவனமான எல்ஐசி

டில்லி:

ஷ்டத்தில் இயங்கி வந்த ஐடிபிஐ வங்கியை,  காப்பீடு நிறுவனமான எல்ஐசி கையப்படுத்தி உள்ளது. ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித பங்குகளை வாங்கி, வங்கியை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

கடந்த  2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்த 4வது காலாண்டில்  ஐடிபிஐ வங்கி பெரும் சரிவை எதிர்கொண்டது. இதையடுத்து,  வங்கியின் பங்குகளை வாங்கி, வங்கிக்கு உயர்கொடுக்க பிரபல காப்பீடு நிறுவனமான எல்ஐசியை மத்திய அரசு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

பொதுமக்களின்  காப்பீடு  பணத்தைக்கொண்டு இயங்கி வரும்  பொதுத்துறை நிறுவனமான  எல்ஐசி, மத்தியஅரசின் வலியுறுத்தலின் பேரில், ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித சேர்களை வாங்க தீர்மானித்தது. அதற்கு எல்ஐசி ஆணையக்குழுவும்  ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து,  மத்திய அமைச்சரவையும்  ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், தற்போது  ஐடிபிஐ  வங்கியின் 51% பங்குகளைக் கைப்பறியதன் மூலம் அதன் பெரும்பான்மை பங்குதாரராக எல்ஐசி உருவெடுத்து உள்ளது.

இதுகுறித்து ஐடிபி வங்கி தரப்பு, பங்குச்சந்தைக்கு அளித்துள்ள செய்திக்குறிப்பில், எல்ஐசி  நிறுவனம் ஐடிபிஐ வங்கியின் பெரும்பாலான பங்குகளைக் கைப்பற்றியிருப்பது, பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்து உள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஐடிபி வங்கிக்கு 1.5 கோடி வாடிக்கையாளர்கள், 18,000 ஊழியர்கள் உள்ளனர். ஐடிபிஐ வங்கி கடந்த செப்டம்பர் காலாண்டில் ₹3,602.49 கோடி நட்டத்தை பதிவு செய்துள்ளது. இதன் மொத்த வாராக்கடன் 31.78% உள்ளது.

இந்த நிலையில், மக்களின் பணத்தில் இயங்கி வரும் காப்பீடு நிறுவனம், நஷ்டத்தில் இயங்கி வந்த  வங்கியை கைப்பற்றி இருப்பது காப்பீடுதாரர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது.