ரூ 12000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்ற எல் ஐ சி

மும்பை

யுள் காப்பீட்டுக் கழகம் தன்னிடம் உள்ள பங்குகளில் ரூ.12000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளது.

ஆயுள் காப்பிட்டுக் கழகம் தன்னிடமுள்ள முதலீட்டை பங்கு விற்பனையில் ஈடுபடுத்தி வருவது தெரிந்ததே.    குறைந்த விலையில் உள்ள பங்குகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதின் மூலம் சென்ற வருடம் இந்த கழகம் ரூ, 25000 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக கணக்கு அளித்துள்ளது.   இதே போல கடந்த 2016-17 ஆம் வருடம் ரூ.10000 கோடியும் அதற்கு முந்தைய வருடம் ரூ.11000 கோடியும் லாபம் ஈட்டி உள்ளது.

அத்துடன் இந்த வருடம் இது வரை ரூ.12000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளது.   தற்போது செய்யப்பட்டுள்ள இந்த விற்பனை நிர்வாகச் செலவுக்காக செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.   ஆயுள் காப்பிட்டுக் கழகம் தன்னிடம் வரும் இன்சூரன்ஸ் பிரிமியங்களைக் கொண்டே செலவுகளை சமாளிக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

ஆனால் பெரும்பாலான தொகையை கழகம் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளது.   இவை அனைத்தும் நீண்ட காலம் சென்ற பின் பயன் தரக் கூடிய பங்குகள் என சொல்லப்படுகிறது.   எனவே நிர்வாக செலவுகளுக்கு லாபம் ஈட்டும் வகையில் எந்த குறுகிய கால பயன் தரும் பங்குகள் இல்லாததால் இந்த பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது குறித்து ஆயுள் காப்பீட்டுக் கழகம் பதில் ஏதும் அளிக்கவில்லை.