தமிழகத்தின் 3 கல்வி நிறுவனங்கள் உள்பட 20 கடல்சார் கல்வி நிறுவனங்களின் லைசென்சு ரத்து!

டில்லி:

மிழகத்தின் 3 கல்வி நிறுவனங்கள் உள்பட  நாடு முழுவதும் 20 கடல்சார் கல்வி நிறுவனங்களின்  லைசென்சு ரத்து  செய்து, அதன் தலைமையகமான கப்பல் இயக்குனரகம் (Directorate General of Shipping)  நடவடிக்கை  உள்ளது.

நாடு முழுவதும் ஏராளமான கடல்சார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், முறையான கட்டமைப்பு மற்றும் கல்வித்திறன் இல்லாத நிலையில், பல கல்வி நிறுவனங்களின் லைசென்சு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழகத்தில், வருணா இன்ஸ்டிடியூட் ஆப் மரிடைம் ஸ்டடி, பாரிஸ் கார்னர் சென்னை, சிதம்பரம் இன்ஸ்டிடியூட் ஆப் மரிடைம் டெக்னாலஜி, கல்பாக்கம் மற்றும் பார்க் ஆப் மரிடைம் அகாடமி, கோயம்புத்தூர் ஆகிய கல்வி நிறுவனங்களின் லைசென்சை ரத்து செய்து தேசிய கப்பல் இயக்குனரகம் (Directorate General of Shipping)  நடவடிக்கை எடுத்து உள்ளது.