“அப்பல்லோவில் ஜெ” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ள “நக்கீரன்” இதழின் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் “நான் எழதிய வெளிவராத ஜெவின் மெடிக்கல் ரிப்போர்ட்டுக்கள்,  புத்தகமாக! புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது!” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு சி.பி.எம். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, “ நீங்கள் இப்படி பொய்யை எழுதினாலும் நாங்கள் படிக்கவேண்டுமா” என்று பின்னூட்டம் இட்டிருந்தார்.

இதற்கு ஒருவர், “இல்லை உண்மை” என்று பதில் பின்னூட்டமிட, அதற்கு பாலபாரதி “உண்மையே இல்லை” என்று மீண்டும் பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

இதற்கு பதிலாக, புத்தகத்தின் ஆசிரியர்  தாமோதரன் பிரகாஷ், ஒரு சிரிப்பு படத்தை பதிந்திருக்கிறார்.

பிரபல பத்திரிகையில் பணிபுரியும் செய்தியாளர் என்றாலும் தனது கருத்தை வெளிப்படையாக வைத்த பாலபாரதியும், இந்த கடுமையான விமர்சனத்தையும் தனது பதிவில் அனுமதித்த தாமோதரன் பிரகாஷ்  இருவருமே பாராட்டுக்குரியவர்களே.