புதுடெல்லி: மாநில அரசின் முடிவை ரத்துசெய்த துணைநிலை ஆளுநரின் செயல், டெல்லி மக்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்றுள்ளார் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்.

டெல்லி மாநில அரசால் நடத்தப்படும் மருத்துமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில், டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்படும் மற்றும் அறிகுறிகள் கொண்டோர் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்ற முடிவுகளை டெல்லியின் கெஜ்ரிவால் அரசு எடுத்திருந்தது. ஆனால், இவற்றை அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ரத்துசெய்துவிட்டார்.

இந்நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது, “இந்த கொரோனா பரவல் காலக்கட்டத்தில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கெல்லாம் சிகிச்சையளிப்பது மிகவும் சவாலான ஒன்று. நாங்கள் அனைவருக்கும் சிகிச்சையளிக்க முயல்கிறோம்.

டெல்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அவர்கள் அனைவருக்கும் சிகிச்சையளிக்கலாம்.

நிலைமை இப்படியிருக்க, மாநில அரசின் முடிவை ரத்துசெய்த துணைநிலை ஆளுநரின் செயலானது, டெல்லிவாழ் மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்ற” என்றுள்ளார் கெஜ்ரிவால்.