டில்லி,

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நீக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் புதிய வழக்க தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணையில் குளறுபடிகள் இருப்பதாகவும்,  ராஜீவ் கொலை தொடர்பாக, சர்வதேச தொடர்பு களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் குளறுபடி உள்ளதாகவும்,  ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு குறித்து விசாரிக்காதது ஏன் என்றும் கேள்வி என்று கேள்வி எழுப்பி தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்,  ராஜீவ் கொலைவழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள  ஆயுள்தண்டனையை நிறுத்திவைக்க கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில், ராஜீவ்காந்தி  கொலை செய்ய உபயோகப்படுத்திய,  பேட்டரி செல் வாங்கி கொடுத்ததாக தன்மீது குற்றம் சாட்டப்பட்டு, தமக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டும், தான்  26 ஆண்டு களுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், தனது தண்டனயை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் கோரி உள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.