அவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளிவந்தபோது, ஒருவர் கொடிய சிறையில் இருந்து தப்பித்தவரைப் போல உணர்ந்தார், மற்றொருவர் நண்பர்கள் விலகுவதைக் கண்டார். கேள்விகளால் துளைக்கப்பட்டார் மற்றொருவர். சந்தேகப்பார்வையுடன் கண்காணிக்கப்பட்டார் மற்றும் ஒருவர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களை சேர்ந்தவர்களாயிருந்தும், வெவ்வேறு அறிகுறிகள் கொண்டிருந்தாலும், கொரோனா வைரஸிலிருந்து மீண்ட இந்த நபர்களிடமிருந்து அனைத்து அனுபவங்களும் உணர்வுகளும் ஒன்று போலவே இருக்கின்றன. மீண்ட பிறகும் ஓர் பெரும் விலையை கொடுத்துள்ளனர். குணமடைந்து வாரங்கள் கழித்தும் அறிந்தவர்கள் அறியாதவர்கள் என அனைவரும் இவர்களிடமிருந்து ஒரு பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றியதை உணர்ந்தனர். இது எழுதப்படும் நேரத்தில் ஆஸ்திரேலியாவில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் 7126 பேர் எனவும், குணமடைந்தவர்கள் 6552 பேர் எனவும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. குணமடைதல் என்பது முற்றிலுமாக குணமடைதல் அல்ல, குறைந்தபட்ச, குறுகியக்கால நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவது மட்டுமே என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் வலியுறுத்துகிறது. மேலும் இந்த பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்க இயலாமல் ஆராய்ச்சியாளர்களும் சுகாதார அதிகாரிகளும் முயன்று வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆறு பேர் கொரோனாவிற்கு பிறகான வாழ்வை விவரிக்கின்றனர்.
கீரன் ரியான்*, 32 வயது
கீரன் ரியான் லாஸ் ஏஞ்சல்ஸில் 42 கி.மீ மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக் கொண்டவர். அவர் பந்தய தூரத்தை ஓடிக் கடந்தது அவருக்கே ஆச்சர்யமான விஷயம். ஆனால், சொந்த ஊருக்கு விக்டோரியாவில் உள்ள  ஹால்ஸ் கேப்பிற்கு திரும்பிய ஒரு வாரத்திற்குப் பிறகு, ரியான் உடல் நிலை மாறுபட்டிருந்தது. படுக்கையில் இருந்தாலும் உறங்க இயலவில்லை. பின்னர், அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அவரது சந்தேகங்களை உறுதிப்படுத்தியது. மாநில சுகாதாரத் துறையின் தொலைபேசி அவருக்கு கொரோனா உறுதியானதை அறிவித்தது. அவரது பெற்றோருக்கு செய்தியை தெரிவித்தபோது அவரது தாய் வெளிப்படுத்திய மவுனம்,  அவர்களின் மன அழுத்தத்தை அவருக்கு உணர்த்தியது. “என் இறப்பு பற்றி நான் நினைத்த முதல் முறை இது” என்று அவர் கூறுகிறார். “நான் நிச்சயமாக ஒரு தைரியமானவன் – அது சரியான செயல் அல்ல என்றாலும், எனது இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள நானே செய்துக் கொண்டேன். எனது பெற்றோருக்கு பாரமளிக்க விரும்பவில்லை” என்றார். நான் முதலில் மக்கள் அனாவசியமாக பயப்படுகிறார்கள் என்று நினைத்தேன், ஆனால், “என்னையொத்த யாரேனும் ஒருவர் தினமும் டிவி மற்றும் இணையத்தில் பேசுவதை கேட்ட பிறது இது மிகவும் கொடூரமானது என்று அறிந்தேன்” என்றார்.

ரியானைப் பொறுத்தவரை, கடினமான நேரம் என்பது இரவில் தூங்கும் நேரம் ஆகும். நண்பர்களும் குடும்பத்தினரும் தூங்கும்போது, ​​“ஒருவேளை இப்படியானால்” என்ற கேள்விகளால் துளைக்கப்பட்டார். இதிலிருந்து மீளும் வழிகளை தேடினார். ஆனால், மேலும் ஆன்லைனில் பார்த்ததைக் கண்டு மிரண்டு போனார். இது அவரது மன ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் என உணர்ந்த அவர், தனது தொலைபேசியைக் கூட அணைத்து விட்டார். இப்போது, ​​குணமடைந்து மூன்று வாரங்களுக்குப் பிறகும், ரியான் வீட்டை விட்டு வெளியேறும்போது பலரும் பதட்டத்துடனும், கருணையுடனும் மாறி மாறி பார்கின்றனர்.  “யாராவது எனக்கு தேவையானதை வழங்க மறுப்பார்கள் அல்லது விரும்பத்தகாததாக உணரக்கூடிய ஒரு சங்கடமான தருணம் இருக்கும் என்று எனக்கு ஒரு பயம் எப்போதும் உள்ளது,” என்று அவர் கூறுகிறார், மேலும் தற்போது குணமடைந்து விட்டாலும், அவருக்கு சொந்தமான இடத்திலும் தனிமைப்பட்டுவிட்டதாக உணர்கிறார். “யாருக்காவது தெரிந்தால் என்ன செய்வது?” என்ற பயம் நீடித்துக் கொண்டேயுள்ளதாக உணர்கிறார். இருந்தபோதிலும், ரியான் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்த காசோலைகளுக்கு மிகவும் நன்றி கூறுகிறார்: “மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது என்பது கிட்டத்தட்ட அனைவராலும் ஏங்குகிற ஒன்று. தொலைபேசி அழைப்புகள், உரைகள், செய்திகள் – அவை உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும் ” அனுபவத்திலிருந்து கூறுகிறார். “இது எனக்கு பல முக்கியமான விஷயங்களில் தெளிவு அளித்துள்ளது. நான் என்னை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்று நான் நிச்சயமாக சொல்கிறேன்.” என்கிறார்.
சீன் ஸ்வீட்ஸர்*, 50 வயது
மணிலாவில் விடுமுறையைக் கழிக்க சென்றவர், கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். பின்னர் குணமடைந்து வெளி உலகிற்கு சென்றபோது தான் தான் ஒரு வித்தியாசமான பொருத்தமற்ற உலகில் வசிப்பதை உணர்ந்தார். பல வாரங்களுக்கு பிறகு, தனது படுக்கையறையை விட்டு வெளியேறி, அவர் நடந்து செல்லும்போது தோட்டவேலை செய்துக் கொண்டிருந்த அண்டை வீட்டாரைப் பார்த்து புன்னகைத்து கை அசைத்தார் – பதிலுக்கு அவர் காட்டிய ஒரு சைகை நல்ல தன்மைக்கு அப்பாற்பட்டது. மளிகைக் கடையில் மற்றவர்களின் முன் நின்றபோது அவர்கள் நடந்துக் கொண்ட விதம், “நான் வேறு உலகில் இருப்பதுப் போல உணர்ந்தேன் – அவர்கள் பதட்டமாக இருந்தார்கள். அவர்கள் உயர்ந்த நிலையில் இருபாதைப் போலவும், நான்  “தீண்டத்தகாதவர்” போலவும் உணர்ந்தேன்” என்றார்.
தனது 18 வயது மகன், ஒரு ரூம்மேட் ஆகியோருடன் ஒரு பங்கிட்டுக் கொள்ளும் வீட்டில் வசிக்கும் ஸ்வீட்சருக்கு, தனது படுக்கையறையில் தனிமைப்படுத்தப்படுவது போதுமானதாக இருந்தது. அவர் ஒரு உபயோகித்து எறியும் கெட்டிலை உபயோகித்தார். கையில் கிருமிநாசினிகளை வைத்திருந்தார். ஸ்ட்ரீமிங் சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் ஒரு பொறியாளராக அவ்வப்போது பணியாற்றினார். அவரது அறிகுறிகளின் உச்சத்தில் இருந்தபோது  அவர் படுக்கையில் இருந்தார். அவருக்கும் அவரது மகனுக்கும் எப்படி உணவளிக்கப்படும் என்பது குறித்த சில கவலைகளுக்குப் பிறகு, சீக்கிய தன்னார்வலர்கள் சூடான உணவை வழங்கி சிக்கலை தீர்த்தனர்.  தர்க்கரீதியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய பெரும்பாலான விஷயங்கள் இருந்தன: அனுதாபம் என்ற ஒன்றைத் தவிர. அவரது மகன் மற்றும் அறை தோழருக்கு அவர் மீது எவ்வித கருணையும் இல்லை. அவர் இறந்துவிடுவதாகவே கருதினர்.
அவர்களின் விரோதப் போக்கு ஒரு நேர்மையான நீண்ட உரையாடலுக்குப் பிறகு, கொஞ்சம் மாற்றப்பட்டாலும், “அடுத்து வந்த நாட்களில் நான் ஒரு தொழுநோயாளியைப் போல உணர்ந்தேன்,” என்று அவர் கூறுகிறார். “எனது சொந்த வீட்டில் ஒதுக்கி வைக்கப்பட்டது  கடினமாக இருந்தது” என்கிறார். .” ஸ்வீட்ஸர் எச்சரிக்கையாக இருந்தார். அதனால் அவரது மகன் மற்றும் ஹவுஸ்மேட்டையும் பாதிக்காமல் மீட்க முடிந்தது. ஆனால் அவரது மகன் ஏர் கண்டிஷனிங் அணைக்க மறந்தபோது,  ஸ்வீட்ஸரின் செல்லமாக கையுறை இல்லாமல் ரிமோட்டைத் தொடுவதாக மிரட்டினார். பின்னர், “ஆய்வாளர்கள் அவரை இரத்த தானம் செய்பவராக, அல்லது  சோதனையின் ஒரு பகுதியாக இருக்கும்படி அல்லது இரத்த தானம் செய்யுமாறு கேட்பார்கள்” என்று ஸ்வீட்ஸர் நம்புகிறார். ஆனால் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத கொடிய கேள்வி ஒன்று உண்டு எனில், அவர் ஒரு கொடிய வைரஸின் பின்னணியில் ஒரு அறிவியல் புனைகதை புத்தகத்தை எழுதுவாரா? என்பதுதான். ஏனெனில், அவர் ஏற்கனவே ஒரு சில மின் புத்தகங்களை இந்த வகைகளில் எழுதி வெளியிட்டுள்ளார். அதற்க்கான அவரது பதில் “உறுதியாக இல்லை” என்பதுதான். “இது சலிப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் பார்க்கக்கூடிய ஒரு எதிரியை நான் விரும்புகிறேன்” என்று முடிக்கிறார்.
கரேன் கிளெமென்ட்ஸ்*, 55 வயது
அமெரிக்காவில் தனது விடுமுறையை முடித்துக் கொண்டு, வீட்டிற்கு பயணப்படும் திட்டத்தில் ஒரு பகுதியாக நியூயார்க்கிலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால், நகரத்தின் வான்வெளி பயணம் முடக்கப்பட்டதாக விமானி அறிவித்த பொது அவர் தனது மூன்றாவது இணைப்பு விமானத்தில் இருந்தார். விமானத்தில் ஏறும்போது விமான நிலையம் மொத்தமுமே காலியாக இருந்தது. ஓரிருவரைத் தவிர பயணிகளும் இல்லை. மற்றவர்களுடன், ஒரு விமானத்தைப் பகிர்ந்துகொண்டு வந்ததிற்கு மிகுந்த கவலையடைந்தார். ஆனால், ஏற்கனவே அது தொற்றியிருந்தது அவருக்கு தெரியாது. “என் அறிகுறிகளை விட மன அழுத்தம் மோசமாக இருந்தது,” என்று கிளெமென்ட்ஸ் கூறுகிறார். அவருக்கு ஏற்பட்ட ஒற்றைத் தலைவலி மற்றும் குமட்டலை நீண்ட விமானப் பயணத்தின் பக்க விளைவுகளாக எண்ணி கண்டுக் கொள்ளாமல் இருந்திருந்தார். “நான் வீட்டிற்கு வந்தேன், என் கால்கள் பலமின்றி வளைந்தன, எனக்கு ஒரு பெரிய பதட்டம் ஏற்பட்டது.” என்றார்.

ஆம்புலன்சிற்கு அழைப்பு விடுத்த பிறகு, துணை மருத்துவர்களும் பாதுகாப்பு நிபுணர்களும் வந்தனர், மேலும் அதுவரை அவருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றாலும், முடிவுகள் நேர்மறையாக வந்தது. அவருக்கு அதில் நம்பிக்கையில்லை. தனிமைபடுத்தப்பட்டார். அவரது தனிமைக் காலம் முடிந்த பின்னரும், கூடுதல் இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருந்தார். 55 வயதான வாழ்க்கை பயிற்சியாளர் கூறுகிறார்: “நான் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியேறி, முற்றிலும் தூக்கத்திற்குள் செல்ல விரும்பினேன்” என்கிறார். அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தவருக்கு வெளி உலகம் கடுமையான அதிர்ச்சியையும், பயத்தையும் அளித்தது.
“எனக்கு தொற்றுநோய் இல்லை, ஆனால் என் மகன் என்னை தனது புறநகரில் கூட இருக்க விரும்பவில்லை” என்று கிளெமென்ட்ஸ் கூறுகிறார். “என்னிடம் இருந்த உண்மை என்னவென்றால், நான் மேலும் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குணமடைந்த ஐந்து வாரங்களுக்குப் பிறகு, மெல்போர்ன் உள்ளூர் கடை ஒன்றில், முகக் கவசம் மற்றும் கையுறைகள் இல்லாமல் மளிகை கடைக்குச் சென்றபோது, ஒரு சந்தர்ப்பத்தில், கடைக்காரர் அவரை ஒரு படி விலகியிருக்கக் கூறினார். தான் குணமடைந்து, பாதுகாப்பாக இருப்பதைக் கூறியும், அவரின் மூசுக் காற்றில் பரவியிருக்கும், என்று கூறி அந்தக் கடைகாரர் ஏற்க மறுத்து விட்டார் என்கிறார். ஆனாலும், “நான் அவர்களிடம் என்னைப் பற்றி சொல்வதை நிறுத்திவிடுவேன் என்று நான் நினைக்கவில்லை – அந்த அதிர்ச்சி தரும் மதிப்பை நான் விரும்புகிறேன்.” என்கிறார்.
காமில் வால்வோ*, 64 வயது
கொரோனா வைரஸிலிருந்து மீண்ட பிறகு காமில் வால்வோ முதல் முறையாக தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அவர் தப்பியோடி வந்தவர் போல உணர்ந்தார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு, ளில், வீதியில் இருந்த ஒரு அந்நியர் தவறவிட்ட, நாணயத்தை எடுத்துக் கொடுத்தபோது, சமூக விலகல் உறுதியை மீறி விட்டதைப் போல உணர்ந்தார். “ஆனால் உண்மையில், நான் ஒரு சாதாரண வாழ்விற்கு திரும்பி விட்டதை அப்போதுதான் உணர்ந்தேன்” என்கிறார். தன தவறை உணர்ந்து அந்த அந்நியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு மட்டுமின்றி, தான் குணமடைந்து விட்டதை விளக்கி, அவருக்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை என உறுதியளித்து பின் வீடு திரும்பினார்.  விமானத்தில் உதவியாளராக பணிபுரியும் தனது மகளிடமிருந்து வைரஸைப் தொற்றிய பிறகு  வால்வோ தனது கணவருடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்: “அவர் அறிகுறியற்றவராக இருந்தார், ஆனால் அவருக்கு வைரஸ் இருந்தது. ஒரு சோதனை செய்துக் கொள்ளாவிட்டால் அது தெரியாமலேயே போயிருக்கும்” என்றார்.

மிதமான அறிகுறிகளை அனுபவிக்கும் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் நம்பிக்கையில், வால்வோ “சர்வைவர் கார்ப்ஸ்” என்ற தனியார் பேஸ்புக் குழுவில் சேர்ந்தார், அங்கு கோவிட் -19 இலிருந்து மீட்கப்பட்ட அல்லது மீட்கப்பட உள்ளவர்களும் ஒருவருக்கொருவர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்திருக்க முடியும். “லேசான அறிகுறி கொண்டவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை” என்று வால்வோ கூறுகிறார். “ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்கள் வினோதமான முறையில் இருக்க மாட்டார்கள்.” என்கிறார். பேஸ்புக் குழுவின் செயலில் உறுப்பினராக இருந்தவர், இப்போது குணமடைந்துள்ளார், வால்வோ இந்த ஆதரவை மற்றவர்களுக்குத் திருப்பித் தருவதாக நம்புகிறார்: “இன்று எனது ’44 வது நாள்’ [மீண்டு வருவதாக] என பதிவிடும்போது அனர் எண்ணினார், ‘ஆஹா, நான் அதிர்ஷ்டசாலி.’”
சிட்னி ஜோடி*, 38 மற்றும் 41 வயது
ஆன்னா* மற்றும் டேவிட் * ஜோடி மற்றும் 40 க்கும் மேற்பட்டவர்கள் – மார்ச் தொடக்கத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஜோடி ஆஸ்திரேலியாவில் உறுதிபடுத்தப்பட்ட முதல் 80 பேர்களில் ஒருவர்களாக இருந்தனர். மேலும் ஆஸ்திரேலியாவில் நேர்மறை சோதனை செய்த முதல் திருமண விருந்தினராகவும் ஆன்னா இருந்தார். கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே திருமண விழா நடைபெற்ற போதிலும், இவர்களைப் பற்றி செய்தியிட்ட கட்டுரையின் கருத்துப் பெட்டியில் அவர்கள் வருகை குறித்து அவரகளது விருந்தினர்களும் மற்றவர்களும் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர். சிட்னி தம்பதியினர் தொடர்புக் கொள்வதை நண்பர்களும், அவர்களுக்கு அறிமுகமானவர்களும் தவிர்த்தனர் அல்லது அஞ்சினர். இந்த காரணங்களுக்காக அவர்கள் அநாமதேயமாக இருக்க விரும்புகிறார்கள்.
குணமடைந்த பின்னர் தனது முதல் நடைப்பயணத்தில், ஆன்னா முகக்கவசத்தை அணிந்துகொண்டு நடந்த போது, தான் உண்மையில் குணமடைந்துவிட்டோமா என்று சந்தேகத்தை அவரும், மற்றவர்களும் கூட எழுபினர். செய்தியறிந்த சுற்றுப்புறத்தினர், இந்த ஜோடிக்கு  அறிமுகமான தெருவினர்  என அனைவரும் அப்பட்டமாக அவர்களைத் தவிர்த்தனர். அவர்களை பற்றி அதுவரை தெரியாதவர்கள், அவர்கள் ஏன் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை மறைத்துவிட்டார்கள் கேள்வி கேட்டபோதும், அதற்க்கு ஒவ்வொரு முறையும் விளக்கம் கூறி ஒரு வித மனப் பாதிப்புக்கு உள்ளாயினர்.  “நீங்கள் எதோ தவறு செய்திருப்பதைப் போல உணர வைக்கப்படுவீர்கள்” என்று டேவிட் கூறுகிறார். மேலும் அவர் இவ்வளவு சீக்கிரம் வைரஸ் தொற்றுக்கு உள்ளானது ஒரு ஆசீர்வாதம் மற்றும் சாபம் என்று விவரிக்கிறார்.
சிறு வணிக உரிமையாளராக இருக்கும் ஆன்னா, தனது வேலை நேரத்திற்கு உதவிய ஒரு ஒப்பந்தக்காரரும் பாதித்திருப்பதை உணர்ந்தபோது குற்ற உணர்ச்சியை உணர்ந்தார். குற்ற உணர்ச்சி இருந்தபோதும், அவருக்குத் தேவையானவற்றை முன்னின்று தங்களால் இயன்றதைச் செய்வதைப் பற்றி மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். “அவர்கள் என்னை முன்னணியில் இருக்க விரும்பினால், நான் அங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஆன்னா கூறுகிறார். அவர்கள் ஏற்கனவே சில சோதனைகளில் பங்கேற்றுள்ளனர்: ஒன்று வீட்டில் சோதனை கருவிகளை மதிப்பீடு செய்தல், மற்றொன்று இரத்தமாற்றத்தைப் பார்ப்பது. டேவிட் இந்த பதிலில் தடுமாறினார்: “தெரியாத போது பயம் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், தற்போதைய விஞ்ஞானம் நாம் பாதுகாப்பான மக்கள் என்று கூறுகிறது.” என்றார்.
*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
தமிழில்: லயா