வெளியானது கவினின் ‘லிப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின் லாசலியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் .அதன்பின் கவின் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

இத்திரைப்படத்துக்கு ‘லிப்ட்’ என்று பெயரிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கில் விரைவில் டீசெர் என வெளியிட்டுள்ளனர் .