Random image

காஷ்மீர் மற்றும் அரியானாவில் நிலநடுக்கம்

ம்மு

காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.   இது ரிக்டர் அளவு கோலில் 4.6 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.   அதிகாலை என்பதால் மக்களில் பலரால் இந்த நிலநடுக்கம் அதிகமாக உணரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்த சில நொடிகளில் அரியானா மாநிலத்திலும் அதைவிட லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.  அரியானா மாநிலத்தில் ஜாஜர் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவு கோலில் 3.1 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.