உஜ்ஜயனி கோயிலின் விளக்கு கோபுரம்!: ஆச்சர்யப்படவைக்கும் வீடியோ

--

த்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

உஜ்ஜைனி மகாகாளி மன்னன் விக்ரமாதித்தனுக்கும் மகாகவி காளிதாசனுக்கும் தரிசனம் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தாள் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலில் இரண்டு தீப தூண்கள் இருக்கின்றன.ஒவ்வொரு தூணிலும் 1001 விளக்குகள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக் கோயிலில் இப்போதும் தினமும் மாலை நேரத்தில் ஆரத்தி செய்யும்போது 2002 விளக்குகளும் ஏற்றப்படுகின்றன.

பூசாரிகள் அதிவிரைவாக படிகளில் ஏறி முதல் நாள் எரிந்து மீதம் உள்ள திரி, அழுக்கு போன்றவற்றை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்துகிறார்கள். எண்ணெய் ஊற்றி பெரிய திரிகளை வைத்து தீப்பந்தங்களைக் கொண்டு விளக்கு ஏற்றுகிறார்கள்.

இந்த அற்புத விளக்கொளி காட்சி தீபக்கோபுரம் போலத் தோன்றும். அதிசயவைக்கும் அந்த காட்சியைக் காணுங்கள்..

 

#LightingTower #Ujjayani #Temple #video