மோடியை போல் மாணவர்களும் கேள்விகளை முன் கூட்டியே அறிவிக்க சொல்லலாமா? : ஊடகம் கிண்டல்

டில்லி

பிரதமர் மோடி கேள்விகளை 48 மணி நேரம் முன்பே கேட்கச் சொல்வது போல் மாணவர்களும் கேட்கலாமா எனசெய்தி ஊடகமான தி ப்ரிண்ட் கிண்டல் செய்துள்ளது.

சமீபத்தில் செய்தி ஊடகமான தி ப்ரிண்ட் வெளியிட்டுள்ள செய்தி கட்டுரையின் தமிழ் சுருக்கம் பின் வருமாறு :

”சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி ஒரு வீடியோ கான்ஃபரென்சிங் நேர்காணல் நடத்தினார்.   அப்போது ஒரு தொண்டர் அவரிடம், “மதிப்புக்குரிய பிரதமர் அவரகளே.  நீங்கள் நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவது மிகவும் நல்ல செயலகும்.  ஆனால் நடுத்தர மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் அரசு எந்த ஒரு விலக்கும் அளிப்பதில்லை.   அதனால் நமது கட்சியின் ஆணிவேர் போன்ற நடுத்தர மக்களுக்கு வரி விதிப்பு மற்றும் வங்கி அபராதம் உள்ளிடவைகளில் இருந்து விலக்கு அளிக்குமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு எந்த பதிலும் சொல்ல இயலாமல் மோடி திணறி உள்ளார்.    கிரிக்கெட் போட்டியின் போது முக்கியமான பந்தை தவற விட்ட வினோத் காம்ப்ளியின் முகம் போல அவர் முகம் மாறியது.    கேள்வியை கேட்டவர் ஒரு வர்த்தகர் என்பதால் அவர் வர்த்தகம் குறித்து பேசுவதாக பதில் அளிக்க மட்டுமே மோடியால் முடிந்தது.   அதன் பிறக் அவர் பாண்டிச்சேரிக்கு வணக்கம் எனக் கூறினார்.

அதன் பிறகு பாஜக பொறுப்பாளர்கள் இனி மோடியுடன் நேர்காணலில் பங்கு பெறுபவர்கள் தங்கள் கேள்விகளை வீடியோ பதிவாக 48 மணி நேரத்துக்கு முன்பு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.    இதுவரை மோடி எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்துக் கொள்ளவில்லை.   அதனால் அவருக்கு எந்த ஒரு கேள்வியையும் உடனடியாக நேர்கொள்ளும் அனுபவம் இல்லை என தோன்றுகிறது.

அத்துடன் மோடியை பட்டதாரி என்பதற்கு பலரும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.  அதுவும் உண்மையோ என இப்போது தோன்றுகிறது.   ஏனென்றால் மாணவர்களிடம் தேர்வில் எந்த கேள்வி கேட்பார்கள் என்பதை மாணவர்கள் தேர்வு நேரத்தில் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும்.  அப்படி இருக்க மாணவர்களும் மோடியைப் போல் கேள்விகளை 48 மணி நேரத்துக்கு முன்பே கேட்க வேண்டும் என கூற முடியுமா?”

என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.