ரொக்க பரிமாற்ற வரம்பு ரூ. 2 லட்சமாக குறைப்பு!!

டெல்லி:
ரூ. 2 லட்சத்துக்கு மேலான ரொக்க பரிமாற்றம் சட்டவிரோதம் மற்றும் அபாராதத்திற்குறியது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரூ. 3 லட்சம் வரை ரொக்க பரிமாற்றம் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.

தற்போது மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதில் ரூ. 2 லட்சம் வரை மட்டுமே அதிகபட்சமாக ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும். அதற்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்தால் அது சட்டவிரோதம் என்றும், அபராதத்திற்குறியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தணையை கொண்டு வந்து கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக மத்திய அரசு குறைத்துள்ளது. அபராதம் 100 சதவீதம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் பெறுவோர் அந்த பணத்துக்கு சமமான அபராதம் செலுத்த நேரிடும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு பிறகு அனைத்து ரொக்க பரிமாற்றமும் கண்காணிக்கப்படுகிறது என்றும், சந்தேகத்திற்குறிய ரொக்க பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதித்யா தெரிவித்தார். ரொக்க பரிமாற்ற கட்டுப்பாடு அரசு, வங்கியியல் நிறுவனங்கள்,

தபால் நிலைய சேமிப்பு கணக்கு அல்லது கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.