வாஷிங்டன்: ‍அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் மற்றும் வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லெவின்ஸ்கி இடையியேயிருந்த தவறான உறவை அம்பலப்படுத்திய லிண்டா டிரிப் மரணமடைந்தார்.
70 வயதான முன்னாள் அரசுப் பணியாளரான அவர், புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பெண்டகனில் பணிபுரிந்துவந்த டிரிப், மோனிகாவின் தோழியாக இருந்த நேரத்தில் கிளிண்டனுடனான உறவை அறிந்து கொண்டார். அதோடு 1997ல் கிளிண்டன் – மோனிகா லெவின்ஸ்கி இடையிலான உரையாடல்களை பதிவு செய்யத் தொடங்கினார்.

2000ஆம் ஆண்டு கிளின்டன் நிர்வாகத்தின் கடைசி நாளில் லிண்டா டிரிப் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தனது கணவருடன் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

இவர் கிளப்பிய புயலால், கிளிண்டனின் பதவிக்கே ஆபத்து வந்தது. கடைசியில், அமெரிக்க செனட் சபையில் மன்னிப்புக் கேட்டப் பின்னரே அவரின் பதவி தப்பியது.