ரஜினி, விக்ரம், சிம்பு பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி..

--

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த லிங்கா என்ற படத்தை தயாரித்தார்.மேலும் விக்ரம் நடித்த மஜா, சிம்பு நடித்த தம் போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார். தவிர கன்னடத்தில் பல்வேறு படங்களை தயாரித்திருப்பதுடன் நடித்தும் இருக்கி றார்.


சமீபத்தில் பெங்களூருவில் வசிக்கும் நடிகையும் எம்பியுமான சுமலதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அவர் தன்னை தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இரண்டு தினங்களுக்கு முன் ராக்லைன் வெங்கடேஷ் நேரில் சந்தித்து பேசிய துடன் அவருடன் சென்று கர்நாடக முதல்வரையும் சந்த்தித் தார்.
இந்நிலையில் ராக்லைன் வெங்க டேஷுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை. ஆனாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டி ருப்பதாக கூறப்படுகிறது.
ராக்லைன் வெங்கடேஷ் மகன் அபிலேஷ் டாக்டராக இருக்கிறார். அவரே தந்தையின் உடல்நிலையை கவனித்து வருவதாக தெரிகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தற்போது கன்னட நடிகர் நடிக்கும் தர்ஷன் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
மேலும் பஜ்ரங்கி .