திநகரில், ஏழு விதமான இனிப்புகளால் உருவான லிங்க விநாயகர்….. பக்தர்கள் தரிசனம்

சென்னை:

ன்று விநாயகர் சதுர்த்தி. இதை  முன்னிட்டு நாடு முழுவதும் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

சென்னையில் சுமார் 2500 சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் நேற்று இரவு முதலே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 300 கிலோ எடையில் பலகாரங்களால் ஆன விநாயகர் சிலை தி.நகரில் வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்து, வணங்கி வருகின்றனர்.

முழு முதற்கடவுளாகிய விநாயகர் அவதரித்த நாளை நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழாவாக இந்துக்கள்  கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.. இதனை முன்னிட்டு பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் ஏராளமான சிலைகள் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  மக்கள் அதிகம் கூடும் இடமான  தி.நகர்  வெங்கட் நாராயணா சாலையில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலங்காரங்களால் ஆன விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் விநாயகர் உருவமும்,  அவரின் கீழே முருகன் நின்ற நிலையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த விநாயகர் சிலையானது தின்பண்டங்களான  முறுக்கு, அதிரசம், தட்டை, ஆப்பம், ஜாங்கிரி, தேன்குழல், மனோகரம் ஆகிய ஏழு விதமான பலகாரங்களை கொண்டு 300 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விநாயகர் சிலை நாளை காலை முதல் வரும் 16ம் தேதி வரை பூஜைகள் செய்யப்பட்டு 16ம் தேதி அன்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படவுள்ளது.

தின் பண்டங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் சிலையை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Devotees worship, Linga Vinayagar made with seven different sweets, now setup in T Nagar area, திநகரில் ஏழு விதமான இனிப்புகளால் உருவான லிங்க விநாயகர்..... பக்தர்கள் தரிசனம்
-=-