நெட்டிசன்:
பா.ஏகலைவன் அவர்களின் முகநூல் பதிவு:
தேச்சையாக ஒரு டி.வி. நிகழ்ச்சி பார்த்தேன்.
ஐயா சுப.வீ, மொழிவாரி மாநில போராட்டம், கோரிக்கைக்காக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,காமராஜர், ஜீவா ஆகியோரின் பங்கு பற்றி பேசினார்.
அவரது தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் அப்படித்தான் எழுதியிருந்தார். போகட்டும்.
periyar_2550844f
அடுத்து இன்னொரு டி.வி. நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுசாமி…
“மதராஸ் மனதே என்று தெலுங்கர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அந்த நேரத்தில் திருப்பதியை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லேகால் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என போராட்டம் நடந்தது.
கேரளவில் உள்ள பாலக்காடு தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற போராட்டம் நடந்தது.
தேவிகுளம் பீர்மேடு இங்கே இணைக்க வேண்டும் என்ற போராட்டம் நடந்தது.
கன்னியாகுமரி பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என போராட்டம் நடந்தது.
கன்னியாகுமரி பகுதிக்காக மார்ஷல் நேசமணி, சைமன், சாமிலிங்க நாடார், குஞ்சநாடார் உட்பட பலர் போராடி வந்தார்கள்.
அதே போன்று திருப்பதி, பீர்மேடு தேவிகுளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்காக ம.பொ.சி. தலைமையில் பலர் போராடி வந்தார்கள்.
இறுதியாக ம.பொ.சி.யின் தீவிர போராடத்தால் திருத்தனி தப்பியது. தெற்கே மார்ஷல் நேசமணி, சைமன் போன்றவர்ளின் போராட்டத்தால் கன்னியாகுமரி பகுதி தப்பியது.
இப்படி நடந்த எத்தனையோ போராட்டங்களில்
எங்காவது ஓரிடத்தில்,
எப்போதாவது ஓர் நாள் தந்தை பெரியாரோ, அறிஞர் அண்ணாவோ கலந்துகொண்டார்களா? அல்லது
தலைமையேற்று போராடியிருக்கிறார்களா?”
என்ற கேள்வியை கேட்டார். அப்போது குறுக்கிட்ட அறிஞர் அருக்கோ…
“அதுமட்டுமல்ல, தேவிகுளம் பீர்மேடு பகுதியை இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் எப்படியாவது பெரியாரை அழைத்துக்கொண்டு வரவேண்டி ம.பொ.சி. எவ்வளவோ முயற்சி எடுத்தார். ஆனால் கடைசிவரை பெரியார் வரவேயில்லை” என்று கூடுதல் தகவலையும் சொன்னார்.
ஆக.
பெரியாரைப் பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது என்பதற்காக…
எல்லாவற்றிலும் பெரியார் மாவை கொண்டுவந்து கலந்துகொண்டிருக்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் பெரியார் லேபிள் ஒன்று மட்டுமே தீர்வென்று கூறக்கூடாது…..
அப்டீன்னு சொல்றாங்க…நீங்க.?”
 
இதற்கு பதில் அளிக்கும்படியாக ஹரிஹரன் என்ற பதிவர் எழுதிய பதிவு:
 
http://linguistic-state-of-india-tamilnadu-periyar-thantai