ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் படம் இயக்குகிறார் லிங்குசாமி. இதில் நாயகி கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளார் .

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

லிங்குசாமி தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைவது இதுவே முதல்முறை. இந்த புதிய காம்போ இணைய முக்கிய காரணம் படத்தின் நாயகன் ராம். இவர் நடித்த ஆறு படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.