ஆதார் பதிவுக்கு மும்பையில் எதிர்ப்பு!! தினமும் செல்போனை ஆஃப் செய்து போராட்டம்

மும்பை:

ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினமும் அரை மணி நேரம் செல்போனை ஆஃப் செய்யும் போராட்டம் மும்பையில் தீவிரமடைந்து வருகிறது.

காலை 11 மணி முதல் இந்த போராட்டம் 30 நாட்களுக்கு நடக்கிறது. மேலும், மும்பை வாசிகள் தங்களது எதிர்ப்பை இ மெயில் மூலம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரிவிக்குமாறு போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தாதர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் பிரபு கூறுகையில், ‘‘எல்லாத்துக்கும் ஆதார் கேட்கிறார்கள். கிரெடிட் கார்டுக்கு கூட ஆதார் கேட்கிறார்கள். ஏன் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற காரணங்களால் நான் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறேன்’’என்றார்.

 

பந்தரா பகுதியை சேர்ந்த விக்ரம் கிருஷ்ணா கூறுகையில், ‘‘ஆதார் வழக்கில் ஏற்கனவே நான் ஒரு மனுதாரராக உள்ளேன். இந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதனால் நான் பிரத்யேகமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.