புதாபி

மீரகத்தின் மிகப் பெரிய செல்வந்தரும் தற்போது பண மோசடி வழக்கில் சிக்கியவருமான பி  ஆர் ஷெட்டியின் பாஜக தொடர்பு குறித்த விவரங்கள் வந்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய இந்தியச் செல்வந்தர்களில் ஒருவரான பி ஆர் ஷெட்டி அபுதாபியைத் தலைமையகமாகக் கொண்டு என் எம் சி என்னும் மருத்துவமனை நிறுவனத்தை நடத்தி வந்தார்.  1970களின் இடையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 19 நாடுகளில் 194 மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.    இந்த நிறுவனம் லண்டன் பங்குச் சந்தை உள்ளிட்ட பல உலக நாடுகளின் பங்குச் சண்டையில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையொட்டி பி ஆர் ஷெட்டி அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி ஓடி உள்ளார்.  லண்டன் பங்குச் சந்தை விதிகளை மீறியதால் இந்த நிறுவனம் தற்போது பிரிட்டன் நீதிமன்ற மேற்பார்வைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்துக்கு அதிக அளவில் கடன் கொடுத்து இதுவரை பணம் வராத அபுதாபி கமர்சியல் வங்கி நிர்வாகக் குழுவில் தங்களையும் இணைக்க லண்டன் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த  பி ஆர் ஷெட்டி அரபு நாட்டில் தொழில் தொடங்கும் முன்பு கர்நாடக அரசியல்வாதியாக இருந்துள்ளார்.   பாஜகவின் தாய்க்கட்சியான ஜனசங்கம் கட்சியின் வேட்பாளராக உடுப்பி உள்ளாட்சித் தேர்தலில் ஷெட்டி போட்டி இட்டுள்ளார்.  அப்போது அவருக்கு ஆதரவாக வாஜ்பாய் மற்றும் மோடி ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்

கடந்த 2016 ஆம் வருடம் ஆர் எஸ் எஸ்  தலைவர் மோகன் பகவத் கேரளாவில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் உள்ள இந்தியத் தொழிலதிபர்களின் கூட்டம் ஒன்றை நடத்தினார்    அதில் பி ஆர் ஷெட்டியும் கலந்து  கொண்டுள்ளார்.  அவர் பலமுறை தனது பாஜக ஆதரவை வெளிக்காட்டி உள்ளார்  கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் மோடியைச் சந்தித்த ஷெட்டி தாம் இந்தியாவுக்கு வந்து மருத்துவம், சுற்றுலா மற்றும் திரைத் தொழில்களில் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

பி ஆர் ஷெட்டி புதிய இந்தியாவை உருவாக்க 500 கோடி டாலரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.  காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 நீக்கப்பட்ட பிறகு ஷெட்டி காஷ்மீரில் 3000 ஏக்கர் பரப்பளவில் படப்பிடிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி உள்ளார்.   உலகின் மிகவும் அழகான ஊரான காஷ்மீரில் இந்த படப்பிடிப்பு நிலையம் அமைப்பதன் மூலம் அனைத்து மக்களும் திரைப்படம் எடுக்கக் காஷ்மீர் வருவதால் சுற்றுலா வளர்ச்சி அடையும் எனவும் அவர் கூறி இருந்தார்.