மாயமான இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்தது: 188 பேர் கதி என்ன?

ஜகர்தா: 

ந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த  லயன் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்டு 13 நிமிடத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த விமானம் கடலுக்குள் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பயணம் செய்த பயணிகள் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்தோனேசியாவின் லைன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை, ஜகர்தாவில் இருந்து பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. மானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இன்று காலை 6.33 மணிக்கு விமானத்துடனான தகவல் துண்டிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. ஜக்ர்த்தா விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, ஜேடி-610 பயணிகள் விமானம் காணாமல் போனதாக அறிவித்தது.

அந்த விமானத்தில் மொத்தம் 188 பயணிகள் இருந்தது தெரியவந்துள்ளது.  இந்நிலையில் தற்போது இந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபந்து நடைபெற்ற பகுதியை நோக்கி மீட்பு படைகள் விரைந்துள்ளன. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்துக்குள்ளான பகுதியில் சேதமடைந்த விமான பாகங்கள மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.