Lion King பாடலை பாடும் கழுதை…!

திரைக்கு வந்து நல்ல வசூலை பெற்ற லயன் கிங் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு பின்னணி இசை கொடுக்கும் கழுதையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றனது .

ஒரு கழுதை தனது உரிமையாளரை லயன் கிங் திரைப்பட பாடலை பாட, அவருக்கு துணையாக ஒலியை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

இந்த வீடியோவினை Travis Kinley என்னும் முகப்புத்தக பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை 25ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளது. மேலும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவினை தங்களது பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.