பெனால்டி வாய்ப்பை இழந்த மெஸ்ஸி மனம் உடைந்தார்

பெனால்டி வாய்ப்பில் ஐஸ்லாந்து உடனான போட்டி டிராவில் முடிவடைந்தது தனக்கு மிகபெரிய வலியை ஏற்படுத்தியதாக அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார். உலக கோப்பை போட்டியில் ஐஸ்லாந்தை அர்ஜெண்டினா எதிர்கொண்ட போது 1-1 என்ற கோல் கணக்கில் புள்ளிகள் பெற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. பெனால்டி வாய்ப்பில் அர்ஜெண்டினா தனது வெற்றியை தவறவிட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
messi hit ball
செர்ஜியோ அகுரோ ஒரு கோல் அடித்து அர்ஜெண்டினாவை முந்திய போது ஆல்ஃப்ரெட் பின்போகசன் கோல் அடித்து புள்ளியை சமன் செய்தார். 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் இருந்த நிலையில் 64வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மெஸ்ஸி அடித்த பந்தை எதிரணி கோல்கீப்பரான ஹான்னஸ் ஹாண்டர்சன் பிடித்து அர்ஜெண்டினா வெற்றிப்பெறும் வாய்ப்பை தவிர்த்தார்.

“பெனால்டி சுற்றில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது எனக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது நன்மைக்காக என்று கருதுகிறேன். போட்டியின் போது மூன்று புள்ளிகளை இழந்ததற்கு நான் பொறுப்பேற்கிறேன். பெனால்டி சுற்றில் ஒரு கிக் விளையாட்டின் போக்கை மாற்றிவிட்டன” என்று மெஸ்ஸி உருக்கமான தெரிவித்தார். குரூப் டி-யில் உள்ள அர்ஜெண்டினா அணி அடுத்து குரோஷியா மற்றும் நைஜீரியாவை எதிர்க்கொள்ள உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றிப்பெறுவோம் என்ற நம்பிக்கைய மெஸ்ஸி அளித்துள்ளார்.

”ஐஸ்லாந்து உடனான போட்டி டிராவில் முடிந்ததால் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை, வெற்றிப்பெறும் அதே மனநிலையில் மீண்டும் விளையாடுவோம். ஐஸ்லாந்து உடனான போட்டியில் வெற்றிப்பெற கடினமாக உழைத்தோம். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. அடுத்த போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்கு முன்பு சில நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளோம்” என்றும் மெஸ்ஸி கூறியுள்ளார்

சமீபத்தில் பார்சிலோனாவுடன் அர்ஜெண்டினா மோதிய போது ஐந்து முறை வெற்றிப்பெறும் வாய்ப்புகளை மெஸ்ஸி தவறவிட்டுள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு சொந்த மண்ணின் ரசிகர்களின் விசில் பறக்க களத்தில் இறங்கிய மெஸ்ஸிக்கு அகுரோவின் கோல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அடுத்து குரோஷியாவை எதிர்க்கொள்ள மெஸ்ஸி தயாராகி வருகிறார்