நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

டெல்லி : இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் இருக்கின்றன. 2014ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது. தற்போது 60 சதவீதத்துக்கு மேல் சிறுத்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: மிகச் சிறப்பான செய்தி. சிங்கங்கள் மற்றும் புலிகளை தொடர்ந்து சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் வாழ்த்துகள். இது போன்ற நடவடிக்கைகளை தொடர்வதுடன், விலங்குகள் வாழ்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.