Random image

மதுபாட்டில்களை பதுக்கினால் குடும்பத்தினர் அனைவருக்கும் சிறை: பீகார் அரசு அதிரடி

பாட்னா:

பீகாரில் பாரதியஜனதா தயவுடன் ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. மாநில முதல்வராக நிதிஷ்குமார் தொடர்ந்து வருகிறார்.

தொடக்கத்தில் முன்னாள் முதல்வர் லல்லு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், பாஜகவின் ஆசை வார்த்தையில் மயங்கி, லல்லுவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் தொடர்ந்து வருகிறார்.

நிதிஷ்குமார் கூட்டணி அரசு ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு மாநிலத்தில் பூரண மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியது.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது அந்த சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள உள்ளது.

இது தொடர்பாக நேற்று பீகாரில் மாநில அமைச்சரவை கேபினட் கூட்டம் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில்  நடைபெற்றது. அதில், பூரண மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி 5 முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த திருத்தத்தில் கூறப்பட்டுள்ள ஷரத்தின்படி, முதல்டுமுறையாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர், இளம் வயதினர்கள், மற்றும்  ஒருவர் மது பாட்டில்கள் தங்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்தாnலா, குடித்திருந்தாலோ, அந்த குடும்பத்தினரையே கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களின்  சொத்துக்கள் , வாகனங்களை பறிமுதல் செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சட்டதிருத்த மசோதா விரைவில் நடைபெற உள்ள  மழைக்கால  சட்டமன்ற கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் மதுவை அடியோடு ஒழிக்கும் நோக்கில் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக அரசு தெரிவித்து உள்ளது.