தமிழ்நாட்டில் மதுபானங்களை ‘டாஸ்மாக்’ நிறுவனம் விற்பனை செய்வது தெரிந்த விஷயம்.

கேரள மாநிலத்தில் கேரள மாநில மதுபான கழகமான ‘பெவ்கோ’ என்ற நிறுவனம் மதுபானங்களை மாநிலம் முழுவதும் விற்று வருகிறது.

அண்மையில் ‘பெவ்கோ’ நிறுவன நிர்வாக இயக்குநருக்கு கேரள மாநில மதுபான தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் “மதுபானங்களை உற்பத்தி செய்யும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதால், மதுபானங்களுக்கான விலையை 30 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தனர்.

இதன் மூலம், தாங்கள் சப்ளை செய்யும் மதுபானங்களுக்கான விலையை அதிகரிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மதுபான ஆலை அதிபர்கள் “விலையை உயர்த்தவிட்டால், மதுபானங்களை சப்ளை செய்ய மாட்டோம்” என்று மிரட்டலும் விடுத்தனர்.

இதையடுத்து “மதுபான உற்பத்தியாளர்களிடம் வாங்கும் மதுபானங்களுக்கு 7 சதவீதம் விலையை அதிகரிக்க வேண்டும்” என கலால்துறைக்கு ‘பெவ்கோ’ வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘பெவ்கோ’ தெரிவித்துள்ளபடி, விலை உயர்த்தப்பட்டால், கேரளாவில் ஒரு லிட்டர் மதுபானத்தின் விலை 100 ரூபாய் அதிகரிக்கும்.

– பா. பாரதி