சென்னை:

மிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.40 வரை உயர்ந்துள்ளது.

தமிழக அரசு வருமானத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்து, மக்களை குடிமகன்களாக மாற்றி கல்லாகட்டி வருகிறது. மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், தமிழகம் முழுவதும் சுமார்  5,300 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நடத்தி கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மதுபானங்களின் விலையை உயர்த்திய தமிழகஅரசு, தற்போது மீண்டும் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்து உள்ளது. மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

இதன்படி டாஸ்மாக்கில் குவார்ட்டர், பீர் விலை தலா ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ.10 முதல்   40 ரூபாய் வரை மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட குவார்ட்டர் அளவு மது பாட்டில்களுக்கு 10 ரூபாயும், பீர் பாட்டில்களுக்கு 10 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் பாட்டிலும் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10 கொடுத்து வாங்க வேண்டும். ஃபுல் விலை ரூ.40 அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபான விலை உயர்வு குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விலை உயர்வு மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 220 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மதுபானங்கள் விற்பனை மூலம் தமிழகஅரசு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.