காந்தி ஜெயந்தி : டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கடைகள் ஒரு நாள் மூடல்

சென்னை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக், ஸ்டார் ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளும் அக்டோபர் 2 அன்று மூடப்பட உள்ளது.

 

வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தி அடிகளின் பிறந்த நாள் விழா சிறப்பாக  கொண்டாடப்பட  உள்ளது.   மகாத்மா காந்தியின் முக்கிய கொள்கைகளில் மது விலக்கும் ஒன்றாகும்.   அதை ஒட்டி மாநிலம் எங்கும் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டும் அது போல வரும் அக்டோபர் 2 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.   அத்துடன் அன்று டாஸ் மாக் மட்டுமின்றி மதுபான விற்பனை உரிமம் அளிக்கப்பட்டுள்ள பார்கள்,  நட்சத்திர உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 அன்று மது விற்பனை எங்கும் நடக்கக்கூடாது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.    இந்த உத்தரவை மீறுவோர் மீது  உரிமம் ரத்து உள்ளிட்ட  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்