லிசா தெலுங்கு டீசரை வெளியிடும் பூரி ஜெகன்நாத்!

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை அஞ்சலி.

இவர் தற்போது இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கி வரும் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் .தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை பி.ஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இப்படத்தின் தெலுங்கு டீஸரை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இரவு 8 மணிக்கு வெளியிடுகிறார்