2018 பிரபல பணக்காரர்கள் பட்டியல்: ரஜினி எத்தனையாவது இடம் தெரியுமா?

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2018ம் வருடத்துக்கான 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரஜினி, விஜய், சூர்யா, நயன்தாரா  உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த பட்டியலில் இந்தி நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம் பிடித்திருக்கிறார். இவரது வருமானம் ரூ.252.25 கோடி. கிரிக்கெட் வீரர் விராத் கோலி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரது வருமானம் ரூ.228.09 கோடி.  மூன்றாவது இடத்தில் ரூ.185 கோடி வருமானத்துடன் அக்ஷய் குமார் இருக்கிறார்.

ரூ.112.8 கோடி வருமானத்துடன் தீபிகா படுகோனே நான்காவது இடத்திலும், தோனி ரூ.101.77 கோடி வருமானத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

தென்னிந்திய நடிகர்களில் ரஜினி முதலிடம் பெற்றுள்ளார். இவரது வருமானம் ரூ.50 கோடி.  இந்திய அளவில் 14வது இடத்தில் இருக்கிறார்.

ரூ.30.33 கோடி வருமானத்துடன் விஜய் 26வது இடத்திலும், ரூ.26 கோடி வருமானத்துடன் விக்ரம் 29வது இடத்திலும், ரூ.23.67 கோடி வருமானத்துடன் சூர்யா, விஜய் சேதுபதி இருவரும் 34வது இடத்திலும், ரூ.17.25 கோடி வருமானத்துடன் தனுஷ் 53வது இடத்திலும், ரூ.15.48 கோடி வருமானத்துடன் டாப்சி 67வது இடத்திலும், ரூ.15.17 கோடி வருமானத்துடன் நயன்தாரா 69வது இடத்திலும், ரூ.14.2 கோடி வருமானத்துடன் கமல்ஹாசன் 71வது இடத்திலும் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ.66.75 கோடி வருமானத்துடன் 11வது இடத்தில் உள்ளார்.

#List #100 #Mos PopularrichPeople #2018 #rajini