சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் செயல்படும் கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை  சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் 1515 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்து உள்ளது.

அதிகரிக்கும் பாதிப்புகளை அடுத்து, சென்னையில் கொரோனா கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. எந்த பகுதிகளில் என்ன மையங்கள் இயங்குகின்றன என்ற பட்டியலையும் சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

அதன்படி, எர்ணாவூர், திருவொற்றியூர், மாதவரம் பால்கம்பெனி, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, ராயபுரம், பெரியமேடு, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

செம்பியம், ஓட்டேரி, மேடவாக்கம் டேங்க் ரோடு, அயனாவரம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, வள்ளுவர்கோட்டம், ஐஸ் அவுஸ், பெசன்ட் நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மதுரவாயல், ஆழ்வார் திருநகர், ஆலந்தூர், தரமணி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், சோளிங்கநல்லூர், பனையூர் ஆகிய பகுதிகளிலும் கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இது தவிர மணலி உள்ளிட்ட 7 இடங்களில் கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்கள் செயல்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.