பெங்களூரு

ர்நாடக மாநில மக்களவை தேர்தலில் மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் போட்டியிடும்  இடங்கள் விவரங்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருகிறது.   வரும் மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் கூடணி வைத்துள்ளன.   இதில் காங்கிரஸுக்கு 20 இடங்களும் மஜதவுக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நேற்று மஜதவுக்கு காங்கிரஸ் ஒதுக்கீடு செய்த தொகுதிகள் விவரம் வெளியாகின.   தற்போது இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதி விவரங்கள் வெளிவந்துள்ளன.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

1.      சிக்கோடி

2.      பெலகாவி

3.      பகல்கோட்

4.      காலபுராகி

5.      ராய்ச்சூர்

6.      பிதார்

7.      கோபல்

8.      பெல்லாரி

9.      ஹவேரி

10.    தார்வாட்

11.    தாவன்கரே

12.    தட்சின கர்நாடகா

13.    சித்திரதுர்கா

14.   மைசூர்

15.   சாம்ராஜ்நகர்

16.   பெங்களூரு ரூரல்

17.   பெங்களூரு செண்டிரல்

18.   பெங்களூரு தெற்கு

19.   சிக்கபல்லாபூர்

20.   கோலார்

ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி இடுகிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகள்

1.      ஹாசன்

2.      மாண்டியா

3.      ஷிமோகா

4.      உடுப்பி சிக்மகளூர்

5.      பெங்களூரு வடக்கு

6.      உத்தர கர்நாடகா

7.      பிஜப்பூர்

8.      தும்கூர்

ஆகிய தொகுதிகளில் மஜத போட்டி இடுகிறது.