வாட்ஸ்அப் உபயோகிக்க முடியாத மொபைல் போன்கள் பட்டியல்

 

டில்லி

வாட்ஸ்அப் செயலி மேம்படுத்தப்பட்டதால் ஒரு சில மாடல் மொபைல்களில் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வாட்ஸ்அப் செயலி பலராலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.   குறும்  தகவல்களில் இருந்து புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஆவணங்களும் இந்த செயலி மூலம் விரைவாகவும் சுலபமாகவும் அனுப்ப முடிகிறது.   சமீபத்தில் வாட்ஸப் மூலம் சட்ட ஆவணங்கள், வக்கில் நோட்டிசுகளையும் அனுப்பலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது

.

வாட்ஸ்அப் செயலி பல விதங்களில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.  அதனால் தற்போதைய பல வசதிகள் ஒரு சில மொபைல்களில் வேலை செய்வதில்லை.  அதனால் அனைத்து வசதிகளும் செயல்படும் வகையில் உள்ள மொபைல்கள் தவிர மற்ற மொபைல்களின் இந்த சேவை செயல்படாது என வாட்ஸப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.    அதனால் குறிப்பிட்ட சில மொபைல்களில் இந்த சேவையை பெற முடியாது என தெரிய வந்துள்ளது.   ஏற்கனவே ஒரு சில மொபைல்களில் வாட்ஸ்அப் உபயோகப்படுத்த இயலாமல் உள்ளது தெரிந்ததே.

ஏற்கனவே நிறுத்தப்பட்ட மாடல்கள்

1.        ஆண்டிராய்ட் சிஸ்டம் 2.3.3 விட பழைய மொபைல்கள்

2.       விண்ட்டொஸ் 8.0 மற்றும் அதை விட பழைய மொபைல்கள்

3.       ஐபோன் 3ஜி எஸ் / ஐ ஒஎஸ் 6

4.       நோக்கிய சிம்பியன் எஸ் 60

5.       ப்ளாக்பெர்ரி ஓ எஸ் மற்றும் 10

தற்போது சேவையை இழக்க உள்ள மொபைல்கள்

1.       நோக்கியா ஏஸ் 40 டிசம்பர் 31 வரை உள்ளது டிசம்பர் 31, 2018 வரை உபயோகிக்கலாம்

2.       ஆண்டிராய்ட் 2.3.7 மொபைல்கள் பிப்ரவரி 1, 2020 வரை உபயோகிக்கலாம்

3.       ஐ ஒஎஸ் 7 மற்றும் அதைவிட பழைய மொபைல்கள் பிப்ரவரி 1, 2020 வரை உபயோகிக்கலாம்

இனி வாட்ஸ்அப் செயல்படக்கூடிய மொபைல்கள் இவை தான்.    பயனாளிகள் இந்த மொபைல் இல்லையெனில் இதற்கு மாற வேண்டும்.

1.       ஆண்டிராய்ட் ஓ எஸ் 4.0 மற்றும் அதற்கு மேல்

2.       ஐ போன் ஐ ஒஎஸ் 8 மற்றும் அதற்கு மேல்

3.       விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு மேல்

இந்த தகவல்களை வாட்ஸ்அப் நிர்வாகம் அறிவித்துள்ளது.