பட்டினியால் வாடும் மக்கள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

டில்லி,

ட்டினியால் வாடும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது.

உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில்  இந்தியாவுக்கு 100-வது இடம் கிடைத்துள்ளது.

மக்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து, வீணாக்கப்படும் உணவு, 5 வயது குழந்தைகளின் வளர்ச்சி விகிதம், குழந்தை இறப்பு விகிதம் என 4 விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் மொத்தம் 119 நாட்கள் இடம்பெற்றுள்ளன.

இதில்,  அதிகளவில் பட்டினியால் வாடுவோர் உள்ள நாடுகளில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் சீனா 29வது இடத்தையிம்,  நேபாளம் 72 இடத்திலும்,  மியான்மர் 77வது இடத்திலும், இலங்கை 84 வது இடத்தையும், வங்கதேசம் 88வது இடத்தையும் பிடித்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான் 106வது இடத்துக்கும், ஆப்கானிஸ்தான் 107வது இடத்திலும் இந்தியாவை விடப் பின்தங்கி உள்ளன.

கார்ட்டூன் கேலரி