பொங்கல் – 2018 ரிலீஸ் படங்கள் எவை?

ரு காலத்தில் தீபாவளி, பொங்கள் என்றால் திரைப்படங்கள் அணிவகுக்கும். ஆனால் சமீப வருடங்களாக பண்டிகை தினங்களில் மிகச் சில படங்கள்தான் வெளியாகின்றன.  ஆனால் அந்தக் குறையை வரும் பொங்கல் பண்டிகை போக்கும் என்று தெரிகிறது.

ஐந்து படங்கள் பொங்கல் அன்று வெளியாகும் என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.

அவை குறித்து ஒரு பார்வை..

தானா சேர்ந்த கூட்டம்:

சூர்யா நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கம் படம். பெரு வெற்றி பெற்ற ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் என்பதால் இந்த எதிர்பார்ப்பு.

விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக  கீர்த்தி சுரேஷ்  நடிக்கிறார். மேலும், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’  என்ற படத்தின் ரீமேக்தான் என்றாலும், தமிழில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்.

சூர்யா நடித்த படங்களில் ஏற்கெனவே இரண்டு, பொங்கல் தினத்தன்று வெளியாகியது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொங்கல் அன்று வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் வகையறா:

இதுவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். நடிகர் விமல் தயாரித்து நடிக்கிறார். அவர் நடிக்கும் 25ஆவது படம் இது.  பூபதி பாண்டியன் இயக்கியிருக்கிறார்.  விமலுக்கு ஜோடி கயல் ஆனந்தி. மேலும்,  சாந்தினி, பிரபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலியும் இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

ஸ்கெட்ச்:

சற்று இடைவெளிக்குப் பிறகு வெளியாக இருக்கும் விக்ரம் படம். “வாலு’ படத்தை இயக்கிய  விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார். தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. விக்ரமுக்கு ஜோடி தமன்னா. மேலும்,  சூரி, ஸ்ரீமன், ராதாரவி, வேல உட்பட பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைத்திருக்கிறார்.

 

குலேபகாவலி:

பிரபுதேவா – ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்திருக்கும் படம்.  மேலும் ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு என்று நிறைய நட்சத்திரங்கள்.

அறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கியிருக்கிறார்.

மதுரவீரன்:

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் இரண்டாவது படம். ( முதல் படம்  சகாப்தம்) . ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி.முத்தையா இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடி  மீனாட்சி. மேலும்,  சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட கதை