மன்மோகன் சிங் சொல்வதைக் கேளுங்கள் : மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை

மும்பை

பாஜகவின் கூட்டணிக்கட்சியான சிவசேனா கட்சி முன்னாள்  பிரதமர் மன்மோகன்சிங் பொருளாதாரம் குறித்துப் பேசுவதைக் கவனிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவில் உள்ளதாகப் பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரபல பொருளாதார ஆர்வலரும் ஆவார்.   சமீபத்தில் மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சி 5% ஆக குறைந்துள்ளது குறித்து மிகவும் கவலை தெரிவித்துள்ளார்   இதை மத்திய பாஜக அரசு கவனத்தில் கொள்ளாமல் உள்ளது.

பாஜகவின் நெருங்கிய கூட்டணிக்  கட்சியான சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில்,,.”நாட்டில் பொருளாதார மந்தநிலை காரணமாக, மிகப்பெரிய பொருளாதார சிக்கல் வரப்போகிறது என்று சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் மனமோகன் சிங் எச்சரித்து இருந்தார். அவர் நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார சூழலையும் நன்கு அறிந்து, எந்தவிதமான வெறுப்பு, விருப்பின்றி பேசி வருகிறார்.

நாட்டின் பொருளாதாரம் தற்[ப்ப்ட்ஜி சரியான பாதையில் செல்லவில்லை  எனவும் மோசமாக இருக்கிறது எனவும் கூறும் மன்மோகன் சிங்கின் வார்த்தை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நாம்  இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மத்திய அரசு மன்மோகன் சிங் விடுக்கும் எச்சரிக்கை மற்றும் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கவனிக்க வேண்டும்.

தற்போது இந்தியப் பொருளாதாரம் உற்சாகம் இழந்து மந்தநிலையில் இருக்கிறது என்பதே உண்மையாகும்   அதே  வேளையில் காஷ்மீர் விவகாரமும், பொருளாதார மந்தநிலையும் வெவ்வேறான விஷயங்கள் ஆகும். அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் பொருளாதார வளர்ச்சிக் குறைவு என்று சொல்பவர்களுக்கு எதிராகப் பேசலாம். அதே நேரத்தில் முன்னா0ள் பிரதமர் மன்மோகன் சிங் வார்த்தைகள் அனைத்தும் உண்மையைச் சொல்லும் வெடிகுண்டுகள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

முன்னாள் பிர்தமர் மன்மோகன் சிங் போன்ற தேர்ந்த பொருளாதார வல்லுநர்கள்  யாரும், பொருளாதார மந்த நிலையில் அரசியல் செய்யமாட்டார்கள்.  மாறாகப் பொருளாதாரச் சூழலைச் சரிசெய்வதற்கான ஆலோசனையை வழங்குவார்கள்.  நமது நாட்டின் நலன் கருதி மன்மோகன் சிங் கூறும் ஆலோசனைகளை, அறிவுரைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்.

தேசத்தின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மன்மோகன் சிங் தொடர்பில் இருந்து வருகிறார். நாட்டின் பொருளாதாரம் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.

பிரதமர் மோடி கடந்த 2017-ம் ஆண்டு மன்மோகன் சிங் குறித்துப் பேசுகையில்,அவர் மழைக் கோட்டு அணிந்துகொண்டு குளிக்கிறார் என விமர்சித்தார். ஆயினும், எங்களுக்கு மன்மோகன் சிங் மீது எந்த வருத்தமும் இல்லை. அவர் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர்.  முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தபோது, தனது கடினமான முயற்சியால், மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தவர்.

நமது நாட்டைப் பொறுத்தவரைப் பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரியும் பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணம் ஆகும்,. இதில் பண மதிப்பிழப்பு  முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்ததாக ஜிஎஸ்டி வரி தொழில்துறையினரையும், வர்த்தகர்களையும் கழுத்தை இறுக்கிப் பிடித்து, தொழில்துறையைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளது.

பாஜக கடந்த சில ஆண்டுகளாகத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், குதிரை பேரம் நடத்துவதில் மட்டுமே கவனமாக இருந்ததால், பொருளாதாரம் உற்சாகம் இழந்துவிட்டது. எனவே இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை அரசு கேட்க வேண்டும்”என குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை பாஜகவின் நெருங்கிய கூட்டாளியான சிவசேனா கட்சி ஆதரிப்பது அரசியல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.