‘எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’: தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரை தொடங்கியது

சென்னை:

2019ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக்கூட்டம்  இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது பேசிய கவர்னர் பன்வாரிலால்   ‘எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’ என்று கூறினார்.

புத்தாண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி யது.  முன்னதாக  சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சபைக்குள் வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 9.45 மணி அளவில் சபைக்குள் வந்தார். அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்பட அமைச்சர்கள் சபைக்கு வந்தனர்.

பின்னர் ஆளுநர் சபைக்கு வந்தார். அவரை சட்டமன்ற சபாநாயகர் அழைத்துச் சென்றார். அதையடுத்து சட்டமன்ற கூட்டம் தொடங்கியது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரை நிகழ்த்துகிறார்.

உரையை தொடங்கியதும் தமிழில் வணக்கம் என்றார். தொடர்ந்து, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும், வாழ்க்கை வாழுங்கள் அது ஊழலை அகற்றிவிடும் என்று கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து உரை நிகழ்த்தி வருகிறார்.